dinamalar telegram
Advertisement

மதுரை, தேனியில் என்.ஐ.ஏ., சோதனை

Share
மதுரை:பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவராகக் கருதப்படுபவர் வீட்டில், என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சரவணகுமார், 32. இவர் சில ஆண்டுகளுக்கு முன், அருகில் வசித்த முஸ்லிம் குடும்பத்தினரால் மதம் மாறி அப்துல்லா ஆனார். மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.கடந்த பிப்ரவரியில், 'இந்தியாவில் அல்லாவின் ஆட்சி' என, பொருள்படும்படியாக, 'பேஸ்புக்'கில் கருத்துகளை பதிவிட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக மதுரை தெப்பக்குளம் போலீசார் ஏப்., 10ல் வழக்குப் பதிவு செய்தனர்.

பின் இவ்வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., 'உபா' எனும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அப்துல்லாவை கைது செய்து, அவரது பின்னணி குறித்து விசாரித்தது. அவரின் பயங்கரவாத அமைப்பு தொடர்பு ஆவணங்களை சேகரித்தது.தற்போது அவர் சென்னை புழல் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை மதுரையில் அவரது வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மதுரை முனிச்சாலையில் உள்ள உறவினர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

சின்னமனுார்



தேனி மாவட்டம், சின்னமனுாரைச் சேர்ந்தவர் யூசுப் அஸ்லாம், 32. மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரைச் சேர்ந்த சமுத்திரக்கனியின் மகனான இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம் மதத்திற்கு மாறினார்.சின்னமனுாரை சேர்ந்த திவான் என்பவர் மகளை திருமணம் செய்த யூசுப் அங்கு வசிக்கிறார். அங்கு, பிரியாணி கடை நடத்தி வருகிறார். மதுரை அப்துல்லாவின் பேஸ்புக் பதிவிற்கு ஆதரவுதெரிவித்து யூசுப் அஸ்லாம் பதிவிட்டுள்ளார். எனவே, அப்துல்லாவுடன் இவருக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் யூசுப் அஸ்லாம் வீட்டிற்கு வந்தனர். வீட்டில் யூசுப், மாமனார், மனைவி, குழந்தைகள் இருந்தனர். ஆறு மணி நேரம் வீட்டை சோதனை செய்ததோடு, அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை பார்த்தனர். அவரின் அலைபேசி, 'பென்டிரைவ்' உள்ளிட்டவற்றை எடுத்து சென்றனர்.

யூசுப் அஸ்லாம், சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார். சோதனைக்கு முஸ்லிம் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement