dinamalar telegram
Advertisement

அனைத்து நகரங்களிலும் கூட்டுறவு மருந்தகம்

Share
Tamil News
சென்னை:அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், கூட்டுறவு மருந்தகங்களை துவக்குமாறு, அதிகாரிகளை கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகம், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்துகின்றன. தற்போது, 291 கூட்டுறவு மருந்தகங்களை நடத்தி வருகின்றன.அவற்றில், 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இந்த மருந்தகங்களுக்கு வரவேற்பு காணப்படுகிறது.

இதனால் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், கூட்டுறவு மருந்தகங்களை விரைவில் துவக்குமாறு, அதிகாரிகளை கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்பொருள் அங்காடிகளின் விற்பனையை, 30 சதவீதம் வரை அதிகரிக்குமாறும்; சிறிய பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் ஆகியவற்றின் விற்பனை விபரங்களை, ஒரே இடத்தில் இருந்தபடி கண்காணிக்கும் வகையில், இணையதள மென்பொருள் வசதிகளை ஏற்படுத்துமாறும், அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement