dinamalar telegram
Advertisement

கணினி வழி குற்றங்கள் விழிப்புணர்வு வீடியோ போட்டி

Share
Tamil News
சென்னை:கணினி வழியாக நடைபெறக்கூடிய குற்றங்களை தடுப்பதற்காக, 24 காவல் நிலையங்களுக்கு இடையே நடைபெற்ற, விழிப்புணர்வு வீடியோ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

தமிழக மக்களிடையே, கணினி தொடர்பான குற்றங்கள் சம்பந்தமாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, 'சைபர் கிரைம்' எனப்படும், 46 கணினி குற்ற தடுப்பு காவல் நிலையங்களுக்கு இடையே, விழிப்புணர்வு வீடியோ போட்டிகள் நடந்தன. சிறந்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதாக, 24 காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த, மூன்று வீடியோக்களில், முதல் பரிசு பெற்ற நாமக்கல் மாவட்டத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு பெற்ற, விருதுநகர் மாவட்டத்திற்கு, 30 ஆயிரம் ரூபாய்.மூன்றாம் பரிசு பெற்ற சேலம் மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல், மீதமுள்ள, 21 மாவட்டங்களுக்கு ஆறுதல் பரிசாக, 5,000 ரூபாய் பரிசு வழங்கி, போலீசாரை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கவுரவித்தார்.அப்போது, கணினி குற்றங்கள் தொடர்பாக, பொது மக்கள், '155260' என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement