dinamalar telegram
Advertisement

தொண்டரை பலி கொடுத்து வளர்ந்த கட்சி தி.மு.க.,

Share
திருவண்ணாமலை:''தி.மு.க.,வை பொறுத்த வரை தொண்டர்களை பலி கொடுத்து வளர்ந்த கட்சி,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருவண்ணாமலையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது: ஹிந்தியை எதிர்த்து தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர்கள் தீக்குளித்தனர். தீக்குளித்தவர்களின் 'போட்டோ' எந்த ஒரு தி.மு.க., கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டு உள்ளதாக தெரியவில்லை. ஆனால், உதயநிதி படத்தை வைத்துள்ளனர்.

தி.மு.க.,வை பொறுத்தவரை தொண்டர்களை பலி கொடுத்து வளர்ந்த கட்சி; அது அவர்களது சித்தாந்தம். பா.ஜ., தலைவர்களை பலி கொடுத்து, தொண்டர்களை வளர்க்கும் கட்சி. காலத்தின் சூழ்நிலை; இதை சாதாரண மக்களிடம் எடுத்து சொல்ல முடியவில்லை.வரும் 2024 ஏப்., மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான வேலைகளை முன்னதாகவே துவங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி:ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், 'இசட்' பிரிவு பாதுகாப்பில் உள்ளார். மதுரைக்கு அவர் வர உள்ள நிலையில், சாலை சீரமைப்பு பணிக்காக, மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, எந்த பணியும் ஒதுக்கவில்லை.தமிழக அரசு மீண்டும் அவரை பணியில் அமர்த்த வேண்டும். இது குறித்து, தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

தமிழகத்திற்கு ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய 41 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தாண்டி, 52 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளன.தமிழக அமைச்சர்கள், டில்லி சென்றால் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கிறது என கூறுகின்றனர். தமிழகம் வந்தவுடன், மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது என நிலைப்பாட்டை மாற்றி கூறுகின்றனர்.

கிறிஸ்துவ பாதிரியார், பாரத மாதா, அரசு, எம்.எல்.ஏ.,க்களை தரக்குறைவாக பேசியிருக்கிறார். போராட்டம் நடத்திய பின் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement