dinamalar telegram
Advertisement

கூடுதல் மின் கட்டண புகார் விசாரிக்க அமைச்சர் உத்தரவு

Share
சென்னை:''கூடுதல் மின் கட்டணம் குறித்து, மின் இணைப்பு எண்ணுடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணுாரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மின் உற்பத்தி செய்யப்படும் அலகுகள், எண்ணுார் துறைமுகத்தில் உள்ள நிலக்கரி கையாளும் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வில், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானியும் பங்கேற்றார்.

பின், செந்தில் பாலாஜி கூறியதாவது:மின் நிலையங்களை ஆய்வு செய்து, சாம்பல் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என, அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். ஒரு சில இடங்களில், பராமரிப்பு பணி சரிவர மேற்கொள்ளாத சூழல் உள்ளது. அதை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கடந்த ஆட்சியில், தேர்தலை மனதில் வைத்து, மின் சாதனங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் மின் தடையும், அதனால் மக்களிடம் அதிருப்தியும் ஏற்படும் என்பதை எண்ணி, பல மாதங்களாக அந்த பணியே மேற்கொள்ளவில்லை.

இதனால் தான், தற்போது மின் தடை ஏற்பட்டது. மின் தடை இல்லாத நிலை உருவாக்கப்படும். மின் கட்டணத்தில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் தான் புகார்கள் வருகின்றன.மின் இணைப்பு எண்ணுடன் புகார் தெரிவித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டிற்கு, மின் வாரிய அதிகாரிகள் சென்று கணக்கீடு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement