dinamalar telegram
Advertisement

ஆட்டோ ஓட்டுனர்களை கவனியுங்கள்: ம.நீ.ம.,

Share
சென்னை:'கொரோனாவால் பாதித்த ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற, தமிழக அரசு ஆலோசனை குழு அமைக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் தொழிலாளர் நல அணி அறிக்கை:கொரோனா ஊரடங்கால், ஆட்டோ தொழிலை நம்பியிருந்த பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அது மட்டுமின்றி, ஒன்றரை ஆண்டுகளாக ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை, மத்திய - மாநில அரசுகள் உயர்த்தியே வந்துள்ளன. இதில், ஆட்டோக்களுக்கான சாலை வரி, காப்பீடு, வங்கி தவணை என, எதையுமே ரத்து செய்ய, மத்திய - மாநில அரசுகள் முன்வரவில்லை.

வருமானம் குறைவு, பெட்ரோல் விலை உயர்வு என்று, ஒன்றரை ஆண்டில் வாழ்வாதாரத்தை இழந்து, இருள் சூழ்ந்துள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் அடங்கிய ஆலோசனை குழு அமைத்து, அந்த குழு முடிவின்படி, ஆட்டோ தொழிலாளர் வாழ்வில் விளக்கேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement