dinamalar telegram
Advertisement

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Share
Tamil News
சென்னை:''அணைகள் இல்லாத மாவட்டங்களில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

நீர்வளத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், தலைமை வகித்து பேசியதாவது:தமிழகம் முழுதும் உள்ள நீர் நிலைகளை புனரமைத்து, துார் வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். புதிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்.

மழை நீர் வழியே கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட் டங்களில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை, குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்க வேண்டும்.நீர் வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், புதிய தடுப்பணைகள் மற்றும் புதிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகள் நலன் கருதி, பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர் நிலைகளை செப்பனிட வேண்டும். கால்வாய்களை சரி செய்ய முன்னுரிமை வழங்கி, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு துார்வாரும் பணிகள், அத்திக்கடவு - அவினாசி திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம்.பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் என, அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து, முதல்வர் ஆய்வு செய்தார்.கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் இறையன்பு, பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement