dinamalar telegram
Advertisement

புதிய சுரங்க கொள்கையை உருவாக்க ஸ்டாலின் உத்தரவு

Share
சென்னை:''சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல், சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து, நிலையான சுரங்கக் கொள்கையை, உருவாக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். முயற்சிகூட்டத்தில், அவர் பேசியதாவது:

சுற்றச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல், சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து, நிலையான சுரங்கக் கொள்கையை, உருவாக்க வேண்டும். செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த, புதிய கொள்கை உருவாக்க வேண்டும். கனிம வருவாயை அதிகரிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத குவாரிகளைக் கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில், அவற்றை மழை நீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும்.

பொது மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு, பாதிப்பு விளைவிப்பதாக உள்ள, பயனற்ற கல் குவாரிகளை, மறு சீரமைப்பு செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட, இரண்டு கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த, கல் மரப் படிமங்கள்; திருச்சி, பெரம்பலுார். அரியலுார் மாவட்டங்களில் உள்ள, தொல்லுயிர் படிமங்கள் ஆகிய வற்றை பாதுகாத்து, 'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய சின்னங்களின் பட்டி யலில் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரங்க நிர்வாகத்தில், மின்னணு சேவை முறையை ஏற்படுத்த வேண்டும். கனிம நிறுவனம், ஐந்து ஆண்டுகளில், 250 கோடி ரூபாய் அளவுக்கு, வருவாயை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அதிகரிப்பு



சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும், 'கிராபைட்'டில் இருந்து, அதிக செறிவூட்டப்பட்ட, உயர்தர கிராபைட் தயாரிக்க, உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அரக்கோணம் அருகே, செயற்கை மணல் தயாரிக்கும், புதிய உற்பத்திப் பிரிவு துவக்க, செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.'மேக்னசைட்' நிறுவனம், கூடுதல் சுரங்கப் பகுதிகளை, அடுத்த மூன்று ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து, உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலர் முருகானந்தம் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement