dinamalar telegram
Advertisement

ஐ.சி.எப்., தனியார்மயமா? மத்திய அமைச்சர் பதில்!

Share
சென்னை:'ஐ.சி.எப்., தொழிற்சாலை ஒருபோதும் தனியார் மயமாகாது' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவிடம், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோர், டில்லி ரயில்வே அமைச்சக கட்டடத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்தனர். அப்போது, அமைச்சரிடம் கூறியதாவது:இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களுள், சென்னை பெரம்பூர், ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்., நிறுவனம், மிகவும் லாபகரமாக இயங்குகிறது.

அதுவும், அதை சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு தருகின்றன. அதை தனியார் மயமாக்கப் போவதாக, செய்திகள் வருகின்றன. இதனால், தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகிறது. தனியார் மயமாக்கினால், ஆட் குறைப்பு செய்வர். ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க நேரிடும். எனவே, ஐ.சி.எப்., நிறுவனத்தை, எக்காரணத்தைக் கொண்டும் தனியார் மயமாக்கக் கூடாது.இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.

அதை கேட்ட அமைச்சர், 'உலகிலேயே இதுபோன்ற தொழிற்சாலைகள், ஒன்பது நாடுகளில் மட்டும் தான் இருக்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும், தனியாரிடம் கொடுக்க மாட்டோம் என, உறுதி அளித்தார்' என, ம.தி.மு.க., செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement