dinamalar telegram
Advertisement

இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜெயகுமார் கண்டனம்

Share
சென்னை:'சார்பட்டா' படத்தில், எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளதற்கு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை அறிவோம். ஆனால், 30 ஆண்டு கால நல் ஆட்சியையே, திட்டமிட்டு, இயக்குனர் ரஞ்சித் மறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான, சார்பட்டா படத்தில், எம்.ஜி.ஆருக்கும், விளையாட்டு துறைக்கும் தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படம் முழுக்க முழுக்க, தி.மு.க.,வின் பிரசார படமாக எடுக்கப்பட்டுள்ளது.

மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் என, ஒவ்வொரு படத்திலும், எம்.ஜி.ஆர்., தன்னை விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்தி இருந்தார். குத்து சண்டையை மிகவும் நேசித்த, ஒரே அரசியல் தலைவர், எம்.ஜி.ஆர்.,கடந்த, 1980ல், 'தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர்' சங்கத்துக்கான நிதி திரட்டும், வேடிக்கை குத்து சண்டையில் பங்கேற்க, 'நாக் அவுட்' நாயகன் முகமது அலியை, எம்.ஜி.ஆர்., சென்னைக்கு அழைத்து வந்தார். போட்டி முடிந்ததும், தன் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து, மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவுக்கு, குத்து சண்டை மீது, காதல் கொண்டிருந்தார்.

திரையில் விளையாட்டுகளுக்கு, முக்கியத்துவம் கொடுத்த எம்.ஜி.ஆர்., முதல்வரான பின், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, எண்ணற்ற சலுகைகளை வழங்கினார். ஆனால், சார்பட்டா படம் முழுதும், தி.மு.க., ஆட்சியில் மட்டுமே, விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும், எம்.ஜி.ஆர்., அவர்களை கை கழுவியது போலவும், காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. அதில் உண்மைகள் மறைக்கப் படுவது, வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவித்த எம்.ஜி.ஆரை, இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளது, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு, ஜெயகுமார் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement