dinamalar telegram
Advertisement

26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Share
சென்னை:துாத்துக்குடியில் இருந்து மீன்பிடி படகு வாயிலாக, இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக, பிப்ரவரியில், துாத்துக்குடியில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 26 கிலோ, 'ஹசிஷ்' எனப்படும், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், போதைப்பொருளை கொள்முதல் செய்து, துாத்துக்குடியில் இருந்து மீன்பிடி படகு வாயிலாக, இலங்கைக்கு கடத்துவதற்கு மூளையாக செயல்பட்டது, இலங்கையை சேர்ந்த வசந்தன் என்ற பிரசாந்த் என, தெரிய வந்தது.

சென்னையில் இருந்தபடி போதைப்பொருளை, அவர் இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்கவும், போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்கவும், குடும்பத்தினர் போல், ஆண், பெண்களை பயன்படுத்தி, கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து, வசந்தனை தேடி வந்த, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், சென்னையில் நேற்று அவரை கைது செய்தனர்.

வசந்தனிடம் விசாரணை நடந்து வருவதாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அமித் கவாதி தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement