dinamalar telegram
Advertisement

இயக்குனர் ஆகிறார் நடிகர் விஜய் ஆன்டனி

Share
Tamil News
சென்னை:பிச்சைக்காரன் 2 படம் வாயிலாக, நடிகர் விஜய் ஆன்டனி இயக்குனராகவும் மாறியுள்ளார்.விஜய் ஆன்டனி நடித்த, பிச்சைக்காரன் படம், 2016ல் வெளியானது. சசி, இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்திலும், மெகா வெற்றி பெற்றது.

விஜய் ஆன்டனியின் புகழையும் உயர்த்தியது. இந்நிலையில் இப்படத்தின், இரண்டாம் பாகத்தை, விஜய் ஆன்டனியே தயாரித்து, இயக்கி நடிப்பதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவரது பேட்டி: நீண்டகால கனவு நனவாகிறது. என் மனதில் இயக்குனர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக, ஒவ்வொரு படத்திலும், நான் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குனர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டுஇருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும் துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது, நன்மை தரும்.

இசை அமைப்பாளராகவும், நடிகராகவும், இத்துறையில் சிறந்த வெற்றியைப் பெற்றிருப்பது, என் அதிர்ஷ்டம். என் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement