dinamalar telegram
Advertisement

ரெய்டு எதிர்பார்த்ததே: விஜயபாஸ்கர்

Share
Tamil News
கரூர் : ''லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ரெய்டு நடவடிக்கை எதிர்பார்த்ததுதான். தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை, சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,'' என, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


கரூரில் அவர் அளித்த பேட்டி:கடந்த 22ம் தேதி சென்னை, கரூரில் உள்ள இல்லம், அலுவலகம் மற்றும் நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். அதில் பணம், ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இது, தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. இதற்கு, முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.
பணம், ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சம்மன் அனுப்பினால் முறையான பதில் தரப்படும்.என்னுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், லாக்கர் சோதனை செய்யப்படுவதாகவும் வந்த தகவல்களில் உண்மை இல்லை.சில, 'டிவி'க்கள் மற்றும் 'ஆன்லைன்' பத்திரிகைகளில் என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெய்டு நடவடிக்கை எதிர்பார்த்தது தான். அதை, நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்திப்போம். சென்னையிலும், கரூரிலும் எனக்கு சொந்த வீடு கிடையாது.வாடகை வீடு தான். 35 ஆண்டுகளாக சாயப்பட்டறை, கிரஷர், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். அதற்கு எல்லாம் முறையான கணக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி வங்கி லாக்கர்கள் முடக்கம்விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் சகோதரரின் வங்கி லாக்கர்களை முடக்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 22ல் சென்னை கரூரில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் உட்பட 26 இடங்களில் சோதனை நடத்தி 25.50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்களை திரட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: தன் உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் விஜயபாஸ்கர் சொத்து குவித்து இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. விஜயபாஸ்கர் மனைவி சகோதரர் மற்றும் பினாமிகளின் வங்கி லாக்கர்களை சோதனையிட முடிவு செய்துள்ளோம்.இதன்படி விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோரது வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. இதற்காக வங்கியிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முன்னிலையில் லாக்கர்களை திறந்து சோதனை நடத்தப்படும். அதில் ஆவணங்கள் இருந்தால் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • gayathri - coimbatore,இந்தியா

  தப்பு செய்தவர்களை காவல் துறை கைது செய்யும் என்றாவது ஒரு நாள் என்று குற்றவாளிக்கு தெரியாதா அதை போலத்தான் இதுவும் உன் மனச்சாட்சி படி சொல்ல அல்லது அதனிடம் கேள் நீ குற்றமற்றவன் என்று அது சொல்லும் (மனச்சாட்சி என்கிற ஓன்று இருந்தால்)

 • அப்புசாமி -

  எதிர்பார்த்தீங்கன்னா எச்சரிக்கையாகவும்.இருந்திருப்பீங்களே? அமலாக்கத் துறையாவது ? புண்ணாக்காவது? அசைக்க முடியாது.

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ரெய்டு நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என்றால் எல்லாத்தையும் மறைச்சு இருப்பான்.

 • M.RAGHU RAMAN - chennai,இந்தியா

  அப்ப எல்லாம் தெரிஞ்சுதான் தப்புபண்ணினாயா...

 • Mohan - Thanjavur ,இந்தியா

  அப்பாடா, 250 C ய மறைச்சிட்டோம்.25 L ல மறந்துட்டோமையா.

Advertisement