dinamalar telegram
Advertisement

ஈகோ ஏற்படுத்திய மவுன யுத்தம்:புதை மின்வட பணி தடுத்து நிறுத்தம்: நெடுஞ்சாலை துறையினர் முரண்டு

Share
Tamil News
திருப்பூர்:புதிய மின் நிலையத்துக்கு புதை மின்வடம் அமைக்க குழி தோண்டும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பணி பாதியில் நிற்கிறது. ஆண்டிபாளையம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின் நிலையத்துக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்திலிருந்து புதை மின் வடம் அமைத்து, இங்கு மின்சாரம் கொண்டு வரும் வகையில் திட்டமிட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வீரபாண்டி பகுதியிலிருந்து ஆண்டிபாளையம் பகுதி வரை 6.5 கி.மீ., துாரம் ரோட்டோரம், குழி தோண்டி கேபிள் பதிக்கும் வகையில் திட்டமிட்டு பணி துவங்கியது.
இதில் ஏறத்தாழ 3.5 கி.மீ., துாரம் மாநகராட்சி ரோடும், 3 கி.மீ., துாரம் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ரோடும் உள்ளது. இந்த பணிக்காக ஏறத்தாழ 25 லட்சம் ரூபாயை ரோடு கட்டிங் கட்டணமாக மின் வாரியம் இந்த இரு துறைகளுக்கும் செலுத்தியுள்ளது.இதில் பெருமளவு பணி நிறைவடைந்த நிலையிலும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பகுதியில் பணி கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது. தேர்தல் நேரத்திலும், கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாகவும் இப்பணி தொடரவில்லை.

இந்நிலையில் நேற்று முருகம்பாளையம் பகுதியில் மின் வாரியத்தினர் குழி தோண்டும் பணியை இயந்திரம் கொண்டு துவங்கினர். இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் அப்பணியைத் தொடரக் கூடாது என தடை செய்ததையடுத்து பணி நிறுத்தப்பட்டது.மின் வாரியத்தினர் கூறுகையில், 'உரிய கட்டணம் செலுத்தியும், நெடுஞ்சாலைத்துறையினர் உரிய அனுமதி வழங்க தாமதம் செய்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பில் அமைத்த மின் நிலையம் பயன்படாமல் உள்ளது' என்றனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'உரிய முறையில் தகவல் அளிக்காமல், எங்கள் ஊழியர்கள் கண்காணிப்பின்றி பணி துவங்கியதால் அதை நிறுத்தியுள்ளோம்' என்றனர்.இரு துறை நிர்வாகம் இடையே ஏற்பட்ட 'ஈகோ' பிரச்னையால், வளர்ச்சிப் பணி பாதிக்கப்பட்டு, பல கோடி மதிப்பு மின் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது தாமதமாகிறது. பணியை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • HONDA -

    சென்னையில் மற்றும் வாழுதோ கொளத்தூர் முதல்வர் தொகுதியில் இரண்டு வருடம் ஆகியும் வேலைபாதியிலேயே உள்ளது

Advertisement