dinamalar telegram
Advertisement

விண்ணப்பிக்கலாம்! அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் ......முகவர்களாக சேர 11ம் தேதி நேர்காணல்

Share
Tamil News
கடலுார், : கடலுார் கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக சேர விண்ணப்பிக்கலாம் என கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவரது செய்திக் குறிப்பு: அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் (அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு) முகவர்களாக சேர கடலுார் பீச்ரோட்டில் அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி காலை 10:30 மணிக்கும், பண்ருட்டி துணை அஞ்சலகத்தில் மதியம் 3:00 மணிக்கும் நேர்காணல் நடக்கிறது. சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் 12ம் தேதி காலை 11:00 மணிக்கும், காட்டுமன்னார்கோவில் துணை அஞ்சலகத்தில் மதியம் 3:00 மணிக்கும் நேர்காணல் நடக்கிறது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல், 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிலும் முகவராக இருக்கக் கூடாது. நேர்காணலில் தேர்ச்சி பெறுபவர்கள் உரிமம் பெற முன்வைப்பாக ரூ. 5,000 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் குடியரசுத் தலைவரின் பெயரில் பினையாக கொடுக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வயது, கல்வித் தகுதி, முன் அனுபவத்திற்கான அசல் மற்றும் நகல் சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றுடன் நேரில் வரலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement