dinamalar telegram
Advertisement

டி.ஜி.பி.,க்கு குஷ்பு நன்றி

Share
சென்னை:'டுவிட்டர்' கணக்கை மீட்டுக் கொடுத்த, தமிழக டி.ஜி.பி.,க்கு, நடிகை குஷ்பு நன்றி தெரிவித்து உள்ளார்.

நடிகையும், பா.ஜ., கட்சி நிர்வாகியுமான குஷ்புவின், 'டுவிட்டர்' கணக்கு, சமீபத்தில் விஷமிகளால் முடக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழக டி.ஜி.பி.,யிடம், குஷ்பு புகார் கொடுத்துஇருந்தார். புகாரை தொடர்ந்து, அவரது டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குஷ்பு, டுவிட்டரில், 'முடக்கப்பட்ட என் டுவிட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்த, டி.ஜி.பி.,க்கு நன்றி' என, கூறியுள்ளார். குஷ்புவின் டுவிட்டர் கணக்கை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement