dinamalar telegram
Advertisement

இதே நாளில் அன்று

Share
Tamil News

ஜூலை 25, 1939



விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் 1939 ஜூலை 25ம் தேதி பிறந்தவர் ராமதாஸ். சென்னை மருத்துவ கல்லுாரியில் டாக்டர் பட்டம் பெற்றார். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பின், ஏழைகளுக்கு சேவை செய்யும் விதத்தில், 'கிளினிக்' ஒன்றை துவக்கி, 3 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்தார்.கடந்த 1980ல், 'வன்னியர் சங்கம்' என்ற அமைப்பை துவக்கினார். வன்னியருக்கு கல்வி,- வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.
வன்னியர் சங்கத்தை 1989ல் 'பாட்டாளி மக்கள் கட்சி'யாக மாற்றி, அரசியல் களத்தில் இறங்கினார். 'பொங்கு தமிழ்' அறக்கட்டளை, 'அலை ஓசை' செய்தித்தாள், 'மக்கள் தொலைக்காட்சி' என, தனித்தமிழை வளர்த்தெடுத்தார்.தேர்தல் களத்தில் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும், அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக பா.ம.க.,வை உருவாக்கியுள்ளார்.டாக்டர் ராமதாஸ் பிறந்த தினம் இன்று!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement