dinamalar telegram
Advertisement

கண்காணிப்பு குழு திருத்தி அமைப்பு

Share
சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் விதிகளின்படி, மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவராக முதல்வர் செயல்படுவார். நிதித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, சுற்றுலாத்துறை அமைச்சர்கள்; ராஜ்யசபா எம்.பி.,க்கள் சந்திரசேகரன், செல்வராசு, லோக்சபா எம்.பி.,க்கள் ஜெயகுமார், செல்வம், ரவிகுமார், ராஜா, திருமாவளவன், செல்வராஜ், தனுஷ் எம்.குமார் மற்றும் 43 எம்.எல்.ஏ.,க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக தலைமை செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., - தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் அல்லது துணை இயக்குனர், தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குனர் அல்லது துணை இயக்குனர் இடம் பெற்றுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழு ஜனவரி மற்றும் ஜூலை மாதம் கூட்டப்படும். இக்குழு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் செயலாக்கத்தை ஆய்வு செய்யும். மேலும், வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட உதவி, மறுவாழ்வு குறித்த விபரங்கள், சட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்கள் மற்றும் அமைப்புகளின் பங்கு ஆகியவை குறித்து ஆய்வு செய்யும்.இதற்கான அரசாணையை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement