dinamalar telegram
Advertisement

4 மாவட்டங்களில் இன்று கன மழை

Share
சென்னை:நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் அறிக்கை:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும், லேசான மழையும், வறண்ட வானிலையும் நிலவும். வரும் 28 வரை இதே சூழல் தொடரும்.சென்னையில் அடுத்த, இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசை ஒட்டி காணப்படும்.

கடந்த 2்4 மணி நேரத்தில், கோவை மாவட்டம், வால்பாறையில், 17; நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில், 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement