dinamalar telegram
Advertisement

முன்பதிவை துவக்கியது சுற்றுலா வளர்ச்சி கழகம்

Share
சென்னை:கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், பயணியரை சுற்றுலா அழைத்து செல்லும் பணியை மீண்டும் துவக்கி உள்ளது.

சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக, சுற்றுலா பயணியரை, சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதை நிறுத்தி வைத்திருந்தது.தற்போது, கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாலும், ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்து உள்ளதாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா திட்டங்களை மீண்டும் செயல்படுத்த துவங்கி உள்ளது.

ஒரு நாள் சக்தி பயணம்; ஐந்து நாட்கள், 108 அம்மன் கோவில் பயணம்; மூன்று நாட்கள் ஆடி அமாவாசை ராமேஸ்வரம் பயணம் ஆகியவற்றுக்கு முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது. இதற்கு, www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.ஒரு நாள் சக்தி பயணத்திற்கு, ஒரு நபருக்கு,850 ரூபாய்; ஐந்து நாட்கள், 108 அம்மன் கோவில் சுற்றுலாவுக்கு, தனி நபருக்கு, 12 ஆயிரத்து, 500 ரூபாய், அறையை பகிர்ந்து கொள்ளும் இருவருக்கு, 9,500 ரூபாய், குழந்தைக்கு, 8,000 ரூபாய்; மூன்று நாட்கள் ஆடி அமாவாசை சுற்றுலாவில், தனி நபருக்கு, 6,500 ரூபாய், அறையை பகிர்ந்து கொள்பவர்களுக்கு, 5,500 ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement