dinamalar telegram
Advertisement

பணி நிரந்தரம் செய்யுங்கள் டாஸ்மாக் ஊழியர்கள் மனு

Share
சென்னை:'டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க நிர்வாகிகள், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்த மனு: டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ.,யை நடைமுறைப்படுத்த வேண்டும்.கடந்த 2019ல் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வு வழியே 500 மேற்பார்வையாளர்கள், இளநிலை உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

காலியான இடங்களில், தகுதியுள்ள விற்பனையாளர்களை மேற்பார்வையாளர்களாகவும்; உதவி விற்பனையாளர்களை விற்பனையாளர்களாகவும் பணியமர்த்த வேண்டும். பணியாளர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில், பணி மாறுதல் வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்றால், மரணமடைந்த அனைத்து பணியாளர்களுக்கும், அரசின் சிறப்பு நிவாரண தொகை 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement