dinamalar telegram
Advertisement

பெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ

Share
ஜெருசலேம்: பெகாசஸ் மென்பொருள் காரணமாக உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர்; தெருக்களில் பாதுகாப்பாக நடக்கின்றனர் என மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ குழுமம் கூறியுள்ளது.

மேற்காசியாவின் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., குழுமம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மென்பொருள் வாயிலாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உட்பட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பல நாடுகளை சேர்ந்தவர்களின் மொபைல் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக என்எஸ்ஓ குழுமத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: பெகாசஸ் தொழில்நுட்பம் உள்ளதால், உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர். தெருக்களில் பாதுகாப்பாக நடக்கின்றனர். இந்த தொழில்நுட்பம் உலகெங்கிலும் உள்ள புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு குற்றங்கள், பயங்கரவாத சம்பவங்களை தடுக்கவும், விசாரிக்கவும் உதவுகிறது. இதே போன்ற தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் விசாரணை அமைப்புகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு உதவும்.

என்எஸ்ஓ மற்றும் அதேபோல் உலகில் உள்ள சைபர் தொழில்நுட்ப நிறுவனங்கள், சைபர் உளவுத்துறை கருவிகளை அரசுகளுக்கு அளிக்கின்றன. இதற்கு, சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி அனுப்பும் செயலிகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க உரிய வழிமுறைகள், விசாரணை அமைப்புகளிடம் இல்லாததே காரணம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் இயக்குவது இல்லை. எந்த தரவுகளையும் நாங்கள் சேமிப்பது கிடையாது. பாதுகாப்பான உலகத்தை உருவாக்க எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

  • bala -

    like that system need in our criminal people.politicians good things talk means no problem. but criminal things talk means catching is good na.after this system coming,nobody talk badthings.....

  • spr - chennai,இந்தியா

    "பெகாசஸ் தொழில்நுட்பம் உள்ளதால், உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர். தெருக்களில் பாதுகாப்பாக நடக்கின்றனர். இந்த தொழில்நுட்பம் உலகெங்கிலும் உள்ள புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு குற்றங்கள், பயங்கரவாத சம்பவங்களை தடுக்கவும், விசாரிக்கவும் உதவுகிறது. இதே போன்ற தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் விசாரணை அமைப்புகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு உதவும்." முற்றிலும் உண்மை குற்றம் செய்தவர்களே இது குறித்து அஞ்ச வேண்டும் எல்லா நாடுகளிலும் இந்த வேவு பார்க்கும் வேலை நடந்து கொண்டுதானிருக்கிறது அவர்கள் யார் குற்றச் செயல்களை செய்ய திட்டமிடுகிறார்கள் என்றுதான் உளவு பார்க்கிறார்கள் மோடி ஆட்சியேற்ற நாள் முதல் பயங்கரவாதம் குறைந்துள்ளதனை எவரும் மறுக்க இயலாது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போல செயல்படுகிறார்கள் என்பதனை நம் காவற்துறையால் மறுக்க முடியுமா ஜாதி மதம் மொழி இனம் என்று பலவழிகளில் மக்களிடம் தவறான செய்திகளை பரப்பி மக்களை போராட வைப்போர் அச்சப்படுவதில் வியப்பில்லை கூகுள் ட்வீட்டர் முகநூல் செய்யாத ஒன்றையா இந்த செயலி செய்யப்போகிறது பயங்கர வாதம் அதிகமாகும் காலத்தில் இது போன்ற செயலிகள் அவசியமே

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஓ அதுதான் ராவுளு அலறுகிறாரோ?

  • Nesan - JB,மலேஷியா

    அப்பன் குத்திருக்குள்ளே இல்லேனு சொல்லுற மாதரி இருக்கு. உங்கள் மென்பொருளை எந்த நாடு வாங்கினாலும் அதை உங்களால் கண்காணிக்க முடியும். எப்படி மைக்ரோசாப்ட் எங்கோ ஒரு மூலையிலே இருந்து கொண்டு இன்னார் கணினி உரிமம் பெறாத மென்பொருளை பயன்படுத்துகிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதோ, அது மாதரி நீங்கள் வேவு பார்க்க முடியும். இது உலகு அறிந்த விஷயம். எனவே காதுலே பூ சுத்தாதீர்கள். இந்த கேடுகெட்ட மென்பொருளை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும். இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவன் இருந்து கொண்டுதான் இருப்பான். தேன் எடுத்தவன் கையை நக்க தான் செய்வான். எந்த அரசியல் வாதியும், ஆட்சியாளரும் உத்தமர்கள் இல்லை. வேண்டுமானால் இந்திய அரசு இந்தவையான மென்பொருளை உருவாக்க அனுமதி கொடுக்கட்டும், ஒரே மாதத்திற்குள் தமிழன் உருவாக்கிவிடுவான். இது உலகு அறிந்த உண்மை. எல்லா நாடுகளும் பரவலாக நாட்டின் இறையாண்மையின் மீது பழிபோட்டு, இதைவைத்து அரசியல் வாதிகளை பலி வாங்குகிறார்கள்

  • Amal Anandan - chennai,இந்தியா

    இந்தியாவில் அதன் பயன்பாடு வேறாக இருப்பதுதானே பிரச்சினை.

Advertisement