dinamalar telegram
Advertisement

தட்சின் சித்ராவில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

Share
சென்னையில் இருந்து மகாபலிபுரம் போகும் வழியில் முட்டுக்காட்டை தாண்டியுள்ளது தட்சின் சித்ரா
தென்னக கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்களைக் கொண்ட இந்த நிரந்தர காட்சியகத்தில் அவ்வப்போது பராம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நீர் நிலைகளைப் போற்றும் விதத்தில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவினை ஐயனார் திருவிழாவோடு கொண்டாட உள்ளனர்கிராமத்து காவல் தெய்வமான ஐயனார் சிலைக்கு பொங்கல் படையலிட்டு பூஜை செய்வதுடன் தட்சின் சித்ராவில் உள்ள குயவர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட மண்ணாலான குதிரை,யானை பொம்மைகளையும் ஐயனாருக்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.
குழந்தைகளுக்கு நமது பாராம்பரியத்தை பண்பாட்டை பழங்கதைகளை எடுத்துச் சொல்லும் கதை சொல்லும் நேரம் நிகழ்வு ஒன்றும் நடைபெற உள்ளது.இதை ‛கதை சொல்லி' என்றழைக்கப்படும் விக்ரம் ஸ்ரீதர் நடத்த உள்ளார்.ஜூலி வைன் என்ற இந்தியா வாழ் வெளிநாட்டு பெண் புகைப்படக்கலைஞர் கடந்த பல ஆண்டுகளாக ஐயனார் சிலை பற்றிய டாகுமெண்டரி படங்களை எடுத்து வருகிறார் ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு தனது படங்களை ஆன் லைன் கண்காட்சியில் வழங்குகிறார்.இதே போல பராம்பரிய நிகழ்வுகளை படமெடுக்கும் அமர் ரமேஷ் என்பவருடனான கலந்துரையாடலும் ஆன் லைனில் நடக்க உள்ளது.விழா ஜீலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ந்தேதி நடைபெற உள்ளது இந்த இரண்டு நாளிலும் துடும்பாட்ட கலை நிகழ்வு நடக்க உள்ளது.இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு லட்சுமி வெங்கட்ராமனுடன் தொடர்பு கொள்ளவும்: 93614 35149.
-எல்.முருகராஜ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement