dinamalar telegram
Advertisement

கொரோனாவிற்கு 2 மூதாட்டிகள் பலி: 955 பேருக்கு சிகிச்சை

Share
புதுச்சேரி-கொரோனா தொற்று காரணமாக இரு மூதாட்டிகள் இறந்தனர். மாநிலம் முழுதும் 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,631 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 68 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 3 ஆக உயர்ந்தது.இவர்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 265 பேர் குணமடைந்து விட்டனர். 147 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 808 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.தற்போதைய நிலையில் மாநிலம் முழுதும் மொத்தம் 955 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதுச்சேரியை சேர்ந்த 80 வயது மூதாட்டி, மாகியில் 67 வயது மூதாட்டி என இருவர் இறந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 72 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். தொற்றிலிருந்து குணமடைவோர் சதவீதம் 97.72 ஆக உள்ளது.மாநிலம் முழுதும் இதுவரை 6 லட்சத்து 54 ஆயிரத்து 510 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement