dinamalar telegram
Advertisement

நான்கு பேர் மீது தாக்குதல்: 8 பேருக்கு இருக்கு வேட்டு

Share
குனியமுத்தூர்:ஆத்துபாலத்திலிருந்து குனியமுத்தூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மதியம், சம்பத் என்பவர் நடந்து சென்றார். நான்கு பேர் கும்பல் ஒன்று, இவரை வழிமறித்து தாக்கியது.அவர்களிடமிருந்து தப்பிய சம்பத், குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில அக்கும்பல் புட்டு விக்கி சாலை சந்திப்பிற்கு சென்று, அவ்வழியே வந்த சரவணனை தாக்கியது.தொடர்ந்து, இரவு சுண்ணாம்பு காளவாய் அருகே, மொய்தீன் மற்றும் மனோஜ் மேனனை தாக்கியது. மூவரும் போலீசில் புகார் செய்தனர்.இந்நிலையில், நேற்று காலை சுண்ணாம்பு காளவாய் அருகே சரவணனை, எட்டு பேர் கும்பல் தாக்கி தப்பியது. போலீசார் விசாரணையில், அவர்கள் ஷாகுல், ரிஸ்வான், ஹக்கீம் மற்றும் அசார் உள்ளிட்ட கும்பல், கஞ்சா போதையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அனைவரையும் போலீசார் தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement