dinamalar telegram
Advertisement

கனமழையால் ரயில்கள் லேட்டாகும்

Share
கோவை:கனமழை, நிலச்சரிவு காரணமாக மும்பை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவை - லோக்மானிய திலக் சிறப்பு ரயில்(01014) நேற்று முன்தினம், மகாராஷ்டிர மாநிலம் சோலபூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இன்று, லோக்மானிய திலக் - கோவை ரயில்(01013) சோலபூர் ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படுகிறது. அதே போல், மும்பை சி.எஸ்.எம்.டி., - நாகர்கோவில் ரயில்(06339) இன்று சோலபூர் ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால், இந்த ரயில்கள் கோவை, நாகர்கோவில் வந்தடைவதில், தாமதத்துக்கு வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement