dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Share
பாகூர்-கஞ்சா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.கிருமாம்பாக்கம் இந்திரா காந்தி சிறுவர் விளையாட்டு பூங்கா பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது .இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் இரு வாலிபர்கள் தப்பி ஓடினர்.போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.விசாரணையில், வைத்திக்குப்பம் சந்தோஷ், 23; கிருமாம்பாக்கம் வினோத்குமார் 26; என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 275 கஞ்சா பொட்டலம், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement