dinamalar telegram
Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்மார்ட் போன்

Share
Tamil News
கோவை:கோவை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்களுக்கான பிரத்யேக ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று, 80 பேருக்கு போன் வழங்கப்பட்டது.கோவையில் கடந்த ஜன., முதல் பார்வையற்றோர், காது கேளாதவர்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, படிப்படியாக ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கோவையில், 180 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் தகுதியான, 80 பேர் ஸ்மார்ட்போன் பெற்றுக்கொள்ள, நேற்று வரவழைக்கப்பட்டனர். பார்வையற்றவர்கள், காதுகேளாதோர் என்பதால் இவர்களுடன் உதவிக்கு ஆட்கள் வந்தால், காலை முதல் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாற்றுத்திறனாளிகள் துறையில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.அதிக நேரம் காக்க வைக்கப்பட்டு பின்பு வழங்கப்பட்டதாக, மாற்றுத்திறனாளிகள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா காலகட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியிலேயே, அதிக கூட்டம் வரும் என்பது தெரிந்தும், சமூக இடைவெளி பின்பற்றவும், உடல் வெப்பநிலை பார்க்கவும், உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி வசந்த் ராம்குமாரிடம் கேட்டபோது, ''மாற்றுத்திறனாளிகள், 80 பேருக்கு நேற்று ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்தியிருந்தோம். பார்வைற்றவர்கள், காதுகேளாதோர் என்பதால் அழைத்தால் தெரியாமல் போய்விடும் என்று நினைத்து, அலுவலகம் முன்பே நின்று கொண்டு இருந்தனர்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement