dinamalar telegram
Advertisement

போக்குவரத்து பாதிப்பு!

Share
செல்வபுரம் பை - பாஸ் ரோட்டில், பொருட்கள் இறக்குவதற்காக நேற்று வந்த லாரி ஒன்று 'மக்கர்' ஆகி, ரோட்டின் குறுக்கே நின்று விட்டது. உக்கடத்தில் இருந்து செல்வபுரம் செல்லும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்க, பணியாளர்கள் லாரியை காலியிடத்துக்கு தள்ளிச்சென்று நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பராமரிப்பு தீவிரம்ரயில்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் சூழலில், கோவை, வடகோவை உள்ளிட்ட ஸ்டேஷன்களின் நடைமேடைகள் துாய்மைப்படுத்துதல், பராமரித்தல் பணிகள் நடந்து வருகின்றன. டைல்ஸ் கற்கள் பதித்தல், தண்டவாளம் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள், சில நாட்களாகவே தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இன்று முதல் சிறப்பு ரயில்எஸ்வந்த்பூர் - கண்ணுார் இடையே இன்று முதல், கோவை வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.எஸ்வந்த்பூரில் இருந்து இன்று இரவு, 8:00 மணிக்கு புறப்படும் ரயில்(07389) மறுநாள் காலை, 9:45க்கு கண்ணுார் அடைகிறது. கண்ணுாரில் இருந்து நாளை மாலை, 6:05க்கு புறப்படும் ரயில்(07390) மறுநாள் காலை, 7:50க்கு எஸ்வந்த்பூர் அடைகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் இந்த ரயில் பனஸ்வாடி, தர்மபுரி, சேலம், திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.வாராந்திர சிறப்பு ரயில்எஸ்வந்த்பூரில் இருந்து வரும், 25ம் தேதி முதல் ஞாயிறு தோறும் இரவு, 11:55க்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில்(07391) மறுநாள் மாலை, 4:05க்கு மங்களூர் அடைகிறது. மங்களூரில் இருந்து வரும், 26 முதல் திங்கள்தோறும் இரவு, 8:05க்கு புறப்படும் ரயில்(07392) மறுநாள் மதியம், 1:00 மணிக்கு எஸ்வந்த்பூர் செல்கிறது. மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் இந்த ரயில் பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், திருப்பூர், கோவை, பாலக்காடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement