dinamalar telegram
Advertisement

நாட்டு வெடிகுண்டு வெடித்து மூதாட்டி படுகாயம்

Share
கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராசு மனைவி காந்திமதி, 67. கணவர் இறந்த பிறகு விவசாயம் செய்து வருகிறார்.கடந்த 19ம் தேதி மாலை, ராமரெட்டிக்குளம் சாலையில் உள்ள தனது நிலத்திற்கு காந்திமதி சென்றார். வயலில் களைவெட்டியால் புற்களை அகற்றியபோது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது.இதில் அவரது வலது கையிலும், இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் அவருக்கு ஆப்பரேஷன் செய்து, உடலில் புகுந்திருந்த கூழாங்கற்களை அகற்றினர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் காந்திமதியிடம் விசாரணை நடத்தினர்.குண்டு வெடிப்பு நடந்த பகுதியில், இரவில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவர். சமூக விரோதிகள் எதிரிகளை பழிவாங்க திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை மண்ணில் புதைத்து வைத்தனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement