dinamalar telegram
Advertisement

சொட்டுநீர் பாசனத்துக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Share
கோவை:மதுக்கரை வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுசிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:மதுக்கரை வட்டாரத்தில் 436 ஹெக்டேரில், தோட்டப்பயிர்களுக்கு, சொட்டு நீர் பானசம் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சொட்டு நீர் பாசனம் அமைக்க, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, சொட்டுநீர் அமைத்து, 7 ஆண்டுகள் முடிந்திருந்தால், உபகரணங்களை மாற்றிக் கொள்ளவும், மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், புகைப்படம் -2 உள்ளிட்ட ஆவணங்களுடன், தோட்டக்கலைத்துறையை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 90952 46221, 97892 62163, 80723 99817 மற்றும் 94435 20633 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement