dinamalar telegram
Advertisement

தேனீக்கள் கொட்டி சிறுவன் பரிதாப பலி

Share
திண்டிவனம்-திண்டிவனம் அருகே தேனீக்கள் கொட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் இறந்தான்.கிருஷ்ணகிரி மாவட்டம், புலிங்குண்ட கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 40; இவரது மகன் ஜீவிதன் ,4. முருகன் சென்னை, ஓட்டேரியில் உள்ள தனஞ்செழியன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி, அங்குள்ள ஸ்வீட் ஸ்டாலில் வேலை செய்து வருகிறார்.கடந்த 20ம் தேதி தனஞ்செழியன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு முருகன் மகன் ஜீவிதனுடன் வந்துள்ளார்.திருவிழா முடிந்து நேற்று முன்தினம் நடுவனந்தல் புதுாரில் உள்ள தனது நிலத்திற்கு ஜீவிதனுடன் சென்றார். அங்கு மாமரத்தில் இருந்த தேனீக்கள் கூடு கலைந்து, கொட்டியதில் ஜீவிதன் மயக்கமடைந்தார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று இறந்தார்.வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement