dinamalar telegram
Advertisement

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை

Share
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னையிலிருந்து நேற்று மதியம் சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் வேலு ஓட்டினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் வந்த போது பஸ்சின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி விட்டு தப்பியோடினர்.இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.பஸ்சிலிருந்து பயணிகள், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து கண்டக்டர் முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement