dinamalar telegram
Advertisement

கொரோனாவால் கணவர் தனிமை: மனைவியை மிரட்டி கொள்ளை

Share
தொண்டாமுத்தூர்:நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, நகையை கொள்ளையடித்து சென்றவர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.தொண்டாமுத்தூர், விவேகானந்தர் நகரை சேர்ந்தவர், ராமசாமி, 78. இவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். மனைவி ரத்தினம்,75.நேற்று முன்தினம் இரவு, ராமசாமி கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு, தனிமையில் இருப்பதால், ராமசாமி ஒரு அறையிலும், அவரது மனைவி ரத்தினம் ஒரு அறையிலும் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில், வீட்டிற்குள் புகுந்த, 2 மர்ம நபர்கள், ராமசாமி தூங்கிக்கொண்டு இருந்த அறையின் வெளிப்புறத்தை பூட்டினர். ரத்தினம் தூங்கிக்கொண்டு இருந்த அறைக்குள் சென்ற மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, ரத்தினத்தின் கழுத்தில் அணிந்திருந்த, 8.5 சவரன் தாலிக்கொடி மற்றும் கையில் அணிந்திருந்த, 3 சவரன் வளையலையும் பறித்து தப்பினர்.தம்பதியினர், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நள்ளிரவில் சென்று புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு, டி.எஸ்.பி., திருமால் நேரில் ஆய்வு செய்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement