dinamalar telegram
Advertisement

ரேஷன் அரிசி பதுக்கிய வியாபாரி கைது

Share
விழுப்புரம்-சின்னசேலம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி, வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையில் பால்ராம்பட்டு முருகன், 56; என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 87 மூட்டைகளில் 50 கிலோ எடையுள்ள 4,350 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.விசாரணையில், முருகன் பால்ராம்பட்டு, கரடிசித்துார் உட்பட பல்வேறு பகுதிகளில் மினி ஆட்டோவில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். அத்துடன், அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து, கர்நாடக மாநிலத்திற்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.இதையடுத்து, முருகன் கைது செய்யப்பட்டார். மினி ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement