dinamalar telegram
Advertisement

இதுவரை 17 லட்சம் லேடீசுக்கு ப்ரீ: அரசு பஸ்களில் 11 நாட்களில் பயணம்

Share
Tamil News
கோவை:அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு, கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் நிலையில், கடந்த, 11 நாட்களில், 17 லட்சம் பேர் இலவசமாக பயணித்துள்ளனர்.தமிழக அரசு உத்தரவுப்படி, அரசு டவுன் பஸ்களில் கடந்த மே, 7ம் தேதி முதல் மகளிர் இலவசமாக பயணித்து வருகின்றனர். சொகுசு பஸ்கள் எனப்படும், 'ரெட்' பஸ்களில் இலவசம் இல்லை. சாதாரண டவுன் பஸ்களில் மட்டுமே பயணிக்க முடியும்.கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தில், இலவசமாக பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் கடந்த, 12ம் தேதி முதல், 'மகளிர் கட்டணமில்லா டிக்கெட்' வழங்கப்படுகிறது.கோவை மண்டலத்தில், உள்ளூர், வெளியூர் என, 17 டிப்போக்களில் 1012 பஸ்கள் பராமரிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது, 772 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 300 சாதாரண பஸ்கள் அடங்கும்.டவுன் பஸ்களில் இலவசமாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என தினமும், 1.55 முதல், 1.60 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது கோவை மண்டலத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை, 772 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள் இலவசமாக பயணிக்கும், 300 சாதாரண பஸ்களும் அடங்கும்.கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் கடந்த, 11 நாட்களில், 17.6 லட்சம் பேர் இலவசமாக பயணித்துள்ளனர். பயணிகள் தேவையை பொறுத்து, அரசு வழிகாட்டுதலின்படி, பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement