dinamalar telegram
Advertisement

குடும்பம் நடத்திய காதலியை கைவிட்டு வேறு பெண்ணை நிச்சயித்தவர் கைது

Share
சேத்தியாத்தோப்பு-இளம்பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்த வாலிபர் , வேறொரு பெண்ணை நிச்சயம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டைச் சேர்ந்தவர் சங்கர் மகள் தனுஸ்ரீ, 22; இவர் 2019ல் வடலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ., படித்தார், அப்போது அள்ளூரைச் சேர்ந்த குணசேகரன் மகன் வசந்தக்குமார், 29; அறிமுகமாகியுள்ளார். இருவரும் காதலித்தனர். அதே ஆண்டு நவ.8ம் தேதி மதியம் 3.00 மணியளவில் தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் வாயிலில் ரகசிய திருமணம் செய்தனர். திருப்பூர் வேலைக்கு செல்வதாக தனுஸ்ரீ பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் காங்கேயம், அவினாசி ஆகிய ஊர்களில் வாடகை வீடு எடுத்து 2 ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக வசந்தகுமார், தனுஸ்ரீ ஆகியோர் பிரிந்து தங்கள் வீடுகளுக்கு வந்தனர். வசந்தகுமாரின் பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். இந்த தகவல் தனுஸ்ரீ தெரிந்தது. இது குறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் தனுஸ்ரீ புகார் கொடுத்தார். அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து வசந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement