dinamalar telegram
Advertisement

ஊட்டச்சத்து பெட்டகத்தில் காலாவதியான பொருட்கள்!

Share
கோவை:கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தில், காலாவதியான பொருட்கள் இருந்தன.அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு, தமிழக சுகாதாரத்துறை சார்பில் இலவசமாக, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.அதில், ஊட்டச்சத்து பவுடர், இரும்பு சத்து டானிக், நெய், பேரிச்சம்பழம், குடற்புழு நீக்க மாத்திரை, பிளாஸ்டிக் டம்ளர், துண்டு ஆகியவை வழங்கப்படுகின்றன.வெள்ளலுாரை சேர்ந்த ஒரு பெண், சிங்காநல்லுாரில் உள்ள மாநகராட்சி நகர் நல மையத்தில் பெற்ற ஊட்டச்சத்து பெட்டகத்தில், பேரீச்சம் பழம் பாக்கெட் மற்றும் நெய் பாட்டில் காலாவதியானதாக இருந்தன.அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனையில் திருப்பிக் கொடுத்தார். இது, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு சென்றது.மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்தபோது, ஊட்டச்சத்து பெட்டகங்கள் சட்டசபை தேர்தல் சமயத்தில், சப்ளை செய்யப்பட்ட விபரம் தெரியவந்தது.அத்துறையினர் கூறுகையில், 'யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டு உள்ளது என கண்டறிந்து, வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யப்படும். காலாவதியான பொருட்கள் இருந்தால், திரும்ப பெற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 'இனி, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் முன், கூடையை திறந்து, பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என சரிபார்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement