dinamalar telegram
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை; நொய்யலில் வெள்ளம்

Share
Tamil News
தொண்டாமுத்தூர்:மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகளில், கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், மேற்கு தொடர்ச்சி மலை, சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம், பழைய குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில், வெள்ளம் ஆர்ப்பரித்தது.கனமழையின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையில், பல இடங்களிலும் அருவிகள் உருவானது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான, சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு, 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement