dinamalar telegram
Advertisement

பிளஸ் 2 தேர்வு எழுத யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை

Share
கோவை:பிளஸ் 2 மதிப்பெண்களில் திருப்தி இன்றி, தேர்வு எழுத வேண்டுமென, யாரும் விண்ணப்பிக்கவில்லை என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வியில் சேர வேண்டுமென்பதற்காக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. நேற்று முதல், மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு நடத்தாமல், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளின் படி, ரிசல்ட் வெளியிட்டதால், மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு, அக்.,ல் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் போது, இவர்களுக்கும் தேர்வு நடத்தி, ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கோவை மாவட்டத்தில், தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து, தற்போது வரை யாரும் விண்ணப்பிக்கவில்லை.அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் சதீஷ்குமார் கூறுகையில், ''மதிப்பெண்களில் திருப்தி இன்றி, தேர்வு எழுதுவதாக, தற்போது வரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. தேர்வு எழுத விரும்புவோர், அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement