dinamalar telegram
Advertisement

பழைய வாகனங்களை விற்கலாமா? வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Share
கோவை;'பழைய வாகனங்களை வாங்குவோருக்கான எச்சரிக்கை பதிவு' என்ற பெயரில், சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.சமூக வலைதள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், பொதுப்போக்குவரத்து மற்றும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களை, தயாரிப்பு தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டும் இயக்கிக் கொள்ளவும்.சொந்த உபயோக வாகனங்களை, 20 ஆண்டுகளுக்கு இயக்கும் வகையிலும், அதற்கு மேல் சில ஆண்டுகளுக்கு தகுதிச்சான்று பெற்று தொடர்ந்து இயக்கவும், சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்நடைமுறையை, 2022ம் ஆண்டு ஏப்., முதல் தேதி அமல்படுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நடைமுறை அமலுக்கு வந்த பின்பு, பழைய வாகன உரிமையாளருக்கு அரசு நிர்ணயித்த தொகைக்கு, ரசீது வழங்கப்படும்.அவர்கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்தின் படி, புதிய பி.எஸ்.6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை, ஈடாக வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.இதை காண்பிக்கும் வாகன புரோக்கர்கள், பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு, வாங்கி, விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.இது குறித்து, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறுகையில், ''இது குறித்து அரசிடமிருந்து, எவ்விதமான அதிகாரபூர்வ அறிவிப்புகளோ, உத்தரவுகளோ வரவில்லை. அதனால் இது போன்ற தகவல்களை நம்பி, மக்கள் ஏமாற வேண்டாம். மக்கள் பழைய வாகனங்களை, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement