dinamalar telegram
Advertisement

கோவை குளங்களில் நடப்பதென்ன அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Share
கோவை:கோவை குளங்களில் செய்யப்படும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக, அமைச்சர் நேருவிடம், தி.மு.க., சுற்றுச்சூழல் அணியினர், ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மற்றும் கோவையில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளான அருளகம், ஆச்சான் குளம் பாதுகாப்பு சங்கம், அழகான கோவை, சி4டிஎன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 'க்யூப்', கவுசிகா நதி பாதுகாப்பு இயக்கம், நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை, ஓசை, 'ராக்', சிறுதுளி ஆகிய அமைப்பினர் ஒன்றிணைந்து, கோவையில் உள்ள குளங்களை சமீபத்தில், ஆய்வு செய்தனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் குளங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர்த்தேக்கும் கொள்ளளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கை தயாரித்து, தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வழங்கினார்.உடனே, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலை தொடர்பு கொண்ட அமைச்சர், ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரச்னைகளுக்கு, தீர்வு காண அறிவுறுத்தினார்.அப்போது, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement