dinamalar telegram
Advertisement

மத நல்லிணக்கத்திற்கு பங்கம்; பாதிரியார் மீது நடவடிக்கை பாயும்

Share
சென்னை : ''மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது ஆணையத்தின் நிலைப்பாடு. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் சில நிர்வாக மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் கல்வி கடன் வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற எந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (84)

  • sankar - ghala,ஓமன்

    பேச்சில் மட்டும் நடவடிக்கை இல்லாமல், உண்மையில் நடவடிக்கை எடுக்கவும் , இவருக்கு இந்த துணிவு எங்கே இருந்து வந்தது, நம் மேல் நடவடிக்கை எடுத்தா இந்த அரசை வோட் வங்கி காட்டி மிரட்டலாம் என்ற எண்ணம் இவர் மனதில் உருவானது எப்படி ? அதற்க்கு நீங்கள் குடுக்கும் சலுகை தான் .

  • ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா

    அவர் பாதிரி தொழிலில் இருந்து வேலை நீக்கம் செய்ய பட வேண்டும் . அதே சர்ச்சில் தோட்டக்காரனாக பூமி மாதாவை பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்படவேணும்

  • பொறியாளன் இளங்கோ., கொங்குநாடு. -

    வரும் ஆனா வராது அந்த டையலாக் தான அமைச்சர் அவர்களே.

  • abibabegum - madurai- Anna nagar,இந்தியா

    பசும் பாலுக்கு பூனை காவல் பீட்டரு ''மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' ஓகே இதுக்கு பிறகு சொன்னேயே -சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் சில நிர்வாக மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் கல்வி கடன் வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற எந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இங்கே தான் உன்னுடைய ரெட்டை வேடம் வெளிச்சத்திற்கு வருது

  • rishi - varanasi,இந்தியா

    அல்போன்ஸ்க்கு நடிப்பு விருது கொடுக்கலாம், எதோ ஒருவிஷயம் தான் வெளில தெரிந்தது, இதுபோல பல பேச்சுக்கள் சர்ச்சு கூட்டங்களில் பேசி இருப்பார்கள் , இந்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது, நம்மை சுற்றி மிகப்பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது அதற்கு இந்த மைனாரிட்டி திமுக துணை போகிறது... திமுகவை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே நம் மதம் காப்பாற்ற படும்...

    • abibabegum - madurai- Anna nagar,இந்தியா

      எஸ், தி.மு.க விடமிருந்து இந்து மதம் மட்டும் காப்பாற்ற பட வேண்டும்

Advertisement