dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: யார் உண்மையான ஹீரோ?

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கே.பாரதிமோகன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கதாநாயகன், சமூகத்தில் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பதும், 50 ரவுடிகளை ஒரே நேரத்தில் அடித்து துாக்குவதும் சினிமாவில் மட்டும் தான். நிஜத்தில் அவர்களின் நேர்மை என்பது கேள்விக்குறி தான். கறுப்பு பணம் அதிகம் புழங்குவதே சினிமா துறையில் தானே... அவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

பல கோடி ரூபாய் செலவழித்து வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யும் நடிகர் விஜய், நம் நாட்டின் நலனுக்காக சில லட்சம் ரூபாய் வரி கட்ட மறுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நடிகர் விஜய் தொடுத்த வழக்கில், 'சினிமா கதாநாயகர்கள் நிஜ வாழ்க்கையிலும் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும்' என, நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ., போன்ற சொகுசு கார் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. இந்த இரண்டு கார்களுக்கும் நுழைவு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும் என, நடிகர் விஜய் தனித்தனியாக வழக்கு போட்டுள்ளார்.
யானை வாங்கியவன் அங்குசம் வாங்க சங்கடப்பட்ட கதையாக, இந்த பிரச்னை உள்ளது. 'நடிகர்கள் சினிமாவில் பேசுவதற்கு சம்பந்தமில்லாமல், பொது வாழ்க்கையில் நடந்து கொள்ள கூடாது. அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைத்து, தன்னை உயர்த்திய மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும்' என, நீதிபதி சொல்லியிருக்கிறார். சினிமா பார்ப்போர் அனைவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் தான் மிக அதிக கட்டணம் செலுத்தி, தியேட்டருக்கு செல்கின்றனர்.

அவர்களின் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ., போன்ற சொகுசு கார்களை இறக்குமதி செய்யும் நடிகர், வரிச்சலுகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பதை, அப்பாவி மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு தடவை, 'சர்வீஸ்' செய்ய, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். அந்த அளவிற்கு கூட இந்த தேசத்திற்கு வரி கட்ட வேண்டாம் என நினைப்பது எவ்வகையில் நியாயம்?

நாடு சுதந்திரம் அடைந்ததும், 550க்கும் மேற்பட்ட சிற்றரசர்கள் தங்கள் மணிமுடியை இறக்கி வைத்து, சமஸ்தானங்களை இந்தியாவுக்கு தாரை வார்த்து கொடுத்தனர். தியேட்டர் எனும் இருட்டறைக்குள் சினிமா எனும் மாய பிம்பத்தில் மட்டுமே அவர்கள் கதாநாயகர்கள். நிஜத்தில், நம் நாட்டிற்காக பாடுபட்டோர் மட்டுமே கதாநாயகர்கள் என்பதை தமிழக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (81)

 • s t rajan - chennai,இந்தியா

  ஜோசப் தான் தன்னுடைய பெயர் என்று சொல்ல தைரியமில்லா எலியைப் போய் புலி என்கிறார்களா ? இதுகள் எல்லாம் கோடி கோடியாய் சம்பாதித்தும் ஒரு சில லட்சங்களை வரியாக செலுத்த தவிர்த்து விட்டு நீதிமன்றக் கருத்தை மாற்ற சொல்லுவது அகம்பாவத்தின் உச்சம்.

 • nsathasivan - chennai,இந்தியா

  இவனை தளபதி என்று நா கூசாமல் கொண்டாடும் முட்டாள் ஜனங்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.அன்றாடம் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு நமக்காக உழைக்கும் உண்மையான தளபதி விவசாயி தான். சொகுசு கார்கள் தம்முடைய மகனை வெளிநாட்டில் படிக்க வைத்து வரிகட்ட பணமில்லை விலக்கு கேட்கும் கூத்தாடிகளை என்று இனம் கண்டு ஒதுக்கி இவன் சினிமா பார்ப்பதை நிறுத்துகிறார்களோ அன்று நம் தமிழ்நாடு முன்னேறும்.

  • raja - Cotonou,பெனின்

   திறமை இல்லாதவனுவோலை "தளபதி" ன்னு சொல்றது தமிழன் பண்பாடு....

 • sridhar - Chennai,இந்தியா

  In movies he will tell that doctors must take only Rs5/ as fee. இவர் வாங்குவதோ அம்பது கோடி.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  Most important question is why he did not mention his profession in his petition/ affidavit, which is vital and important. The petition should contain name, name of the father, address, age and profession. This lord labkdoss consciously or on the advice of his lawyer or auditor concealed/ suppressed his profession. For this reason alone, his petition could have dismissed on the grounds of imperfect petition or affidavit. The most surprising aspect is that he had the audacity to comment on government's taxation proposals by comparing with Singapore. The court should not waive the tax and fine but also should not remove the comments incorporated in the judicial order.

 • Ram - ottawa,கனடா

  இவர் புலியா இல்லை புளியா

Advertisement