dinamalar telegram
Advertisement

வணிக வளாகத்தில் தீ விபத்து

Share
Tamil News
சென்னை:அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஆறு மாத குழந்தை உட்பட 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பொருட்கள் தீக்கிரையாகின.சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே ஜி.ஜி. வணிக வளாகம் உள்ளது. இதன் உரிமையாளர் சாந்திலால் டி ஜெயின் 75. ஐந்து மாடிகளுடன் கூடிய இந்த வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் 1400 சதுர அடியில் 'தேவராஜ் கணினி விற்பனை சர்வீஸ் குடோன்' உள்ளது. நேற்று காலை 11:45 மணிக்கு இங்கிருந்து கரும்புகை வெளியேறியது. சற்று நேரத்தில் தீ கொழுந்து விட்டெரிய துவங்கியது.அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 'ஸ்கை லிப்ட்' வாயிலாக மூன்றாவது தளத்திற்கு சென்று 6 மாத குழந்தை ஏழு பெண்கள் உட்பட 10 பேரை பத்திரமாக மீட்டனர்.

தீ கட்டுக்குள் வராததால் மயிலாப்பூர் கீழ்ப்பாக்கம் வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement