dinamalar telegram
Advertisement

பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவுக்கு ஆதரவு

Share
புதுடில்லி,:''ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரிப்பேன்'' என, ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்லா ஷாகித் தெரிவித்தார்.

ஐ.நா., பொது சபையின் 76வது தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். செப்டம்பரில் நடக்க உள்ள ஐ.நா., பொது சபை கூட்டத்தில் அவர் தலைவராகபதவியேற்பார்.இந்நிலையில் மூன்று நாள் பயணமாக அப்துல்லா ஷாகித் டில்லிக்கு வந்தார்.

செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. ஐ.நா., பொது சபை தலைவர் என்ற முறையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் ஏற்படுத்த முயற்சிப்பேன். அனைத்து நாடுகளிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவேன்.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்துவேன். ஆசியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு பல அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகிவிட்டன.

பயங்கரவாதத்துக்கு மதம், நாடு, மனிதநேயம் என எதுவும் கிடையாது; அது ஒரு தீய சக்தி. அதை வேரோடு அழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement