dinamalar telegram
Advertisement

ஐ.நா., வரிக்குழுவில் இந்திய அதிகாரி

Share
நியூயார்க்:ஐ.நா., சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் வரிக்குழுவில் மத்திய நிதியமைச்சகத்தின் இணைச் செயலர் ரஸ்மி ரஞ்சன் தாஸ் இடம் பெற்றுள்ளார்.சர்வதேச வரி சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா., வரிக்குழுவை அமைத்துள்ளது.

இந்த குழுவில் வரித்துறையை சேர்ந்த நிபுணர்கள் 25 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பர். உறுப்பினர்களின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள்.இந்நிலையில் 2021 - 26ம் ஆண்டுக்கான ஐ.நா., வரிக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மத்திய நிதியமைச்சகத்தின் இணை செயலர் ரஷ்மி ரஞ்சன் தாஸ் இடம் பெற்றுள்ளார். ஐ.நா., வரிக்குழுவில் முதல் முறையாக அதிகளவில் பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement