dinamalar telegram
Advertisement

முட்டை விலை ரூ.2.24: நம்ப வேண்டாம்

Share
நாமக்கல்:'ரூ.2.24க்கு முட்டை விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை நம்பி மக்கள் ஏமாற்றம் அடையகூடாது' என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து நிருபர்களிடம் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:சமீபத்தில் வெளியான (தினமலர் நாளிதழில் அல்ல) விளம்பரம் ஒன்றில்ஒரு முட்டை 2.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டை உற்பத்தி செலவே 4.80 ரூபாய் ஆகிறது. அதிலும் வீடு வீடாக சென்று வழங்குவது என்பதை ஆச்சரியமாக தான் பார்க்கிறோம்.

சத்துணவுக்கே 4.85 ரூபாய்க்கு தான் அரசு முட்டைகளை கொள்முதல் செய்கிறது. கிராமப்புறங்களில் ஈமு கோழி வாங்கி ஏமாற்றமடைந்தது போல் யாரும் ஏமாற்றமடைந்து விடக் கூடாது.சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திடம் தமிழக அரசு விசாரணை நடத்தி எந்த வகையில் முட்டைகளை வழங்குகின்றனர் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

கோவை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட முகவரியில் சென்று கோழிப் பண்ணையாளர்கள் சென்று பார்த்த நிலையில் அங்கு யாரும் இல்லை. இது தொடர்பாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரிடம் முறையிட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement