dinamalar telegram
Advertisement

ஜீன்ஸ் அணிந்ததால் உ.பி., பெண் கொலை

Share
தியோரா:உத்தர பிரதேசத்தில் 'ஜீன்ஸ்' அணிந்ததால் குடும்பத்தினர் சேர்ந்து ஒரு இளம்பெண்ணை கொலை செய்துள்ளனர்.

உத்தர பிரதேசம் தியோரா மாவட்டத்தின் சாவ்ரேஜி கார்க் கிராமத்தை சேர்ந்த நேஹா பஸ்வான் 17 என்ற பெண் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி 'ஜீன்ஸ் டி - ஷர்ட்' போன்ற உடைகளை உடுத்தி வந்துள்ளார்.கடந்த 19ம் தேதி இந்த விஷயத்தில் நேஹாவுடன் அவரது தாத்தா உள்ளிட்ட உறவினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின் நேஹாவை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் நேஹாவின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.அச்சமடைந்த அவர்களின் குடும்பத்தினர் நேஹாவின் உடலை நதியில் வீசி எறிந்துள்ளனர். பின் அந்த உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து நேஹாவின் தாயும் அவரது சகோதரரும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

நேஹாவின் தாத்தா உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.எனினும் ஜீன்ஸ் அணிந்ததற்காக இளம்பெண் கொல்லப்பட்டதாக கூறுவதில் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. இந்த கொலைக்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement