dinamalar telegram
Advertisement

வருமான வரி மறுமதிப்பீடு நோட்டீஸ் காங்., எம்.பி., கார்த்தி அப்பீல்

Share
சென்னை:வருமான வரி மறுமதிப்பீட்டுக்காக அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரமும் அவரது மனைவியும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள 5.11 ஏக்கர் நிலத்தை 2015ம் ஆண்டில் 'அக்னி எஸ்டேட்ஸ்' என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தார்.ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என 15.33 கோடி ரூபாய்க்கான காசோலை பெற்றார். சில ஆண்டுகளுக்கு பின் அக்னி எஸ்டேட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.அதைத் தொடர்ந்து 2014 -15ல் 6.38 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை கருதி மீண்டும் கணக்கை ஆய்வு செய்ய துவங்கியது.

பின் 2014 -15 2015 -16ம் ஆண்டு கணக்கில் 6.38 கோடி ரூபாயை ஏன் வரி விதிப்புக்கு எடுத்து வரக்கூடாது எனக் கேட்டு கார்த்திக்கும் அவரது மனைவி ஸ்ரீநிதிக்கும் நோட்டீஸ் அனுப்பியது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி ஸ்ரீநிதி மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி உரிய நடைமுறையை பின்பற்றி மறுஆய்வு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம். மனுதாரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கார்த்தி அவரது மனைவி ஸ்ரீநிதி மேல்முறையீடு செய்துள்ளனர். இம்மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.இதற்கிடையில் வருமான வரி கணக்கு மறுமதிப்பீடு உத்தரவுகளை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement